Home Featured நாடு 10 பேர் கொண்ட பொருளாதார சிறப்புக் குழுமத்தை அறிவித்தார் பிரதமர் நஜிப்!

10 பேர் கொண்ட பொருளாதார சிறப்புக் குழுமத்தை அறிவித்தார் பிரதமர் நஜிப்!

533
0
SHARE
Ad

najibபுத்ராஜெயா – நாட்டின் பொருளாதார சூழலை கையாள்வதற்காக, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று 10 வல்லுனர்கள் கொண்ட பொருளாதார சிறப்புக் குழுமத்தினை அறிவித்துள்ளார். அந்தக் குழுமத்தின் தலைவராக டத்தோஸ்ரீ அப்துல் வாஹிட் ஓமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓமர் தவிர, அந்த குழுமத்தில், டத்தோஸ்ரீ நசீர் துன் ரசாக், டத்துக் அப்துல் ஃபரித் அலியாஸ், டான்ஸ்ரீ அஸ்மான் முக்தார், டான்ஸ்ரீ நோர் முகமட் யாக்கோப், டத்துக் டாக்டர் நூர் அஸ்லான் கசாலி, டத்தோஸ்ரீ டாக்டர் கே.கோவிந்தன் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக நஜிப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புதிய பொருளாதார சிறப்புக் குழுமம், ரிங்கிட் வீழ்ச்சி உள்ளிட்ட தற்போதய பொருளாதார சூழலை கையாள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுமம், பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.”

#TamilSchoolmychoice

“இக்குழுமத்தின் சந்திப்பு ஒவ்வொரு வாரமும் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவசியம் ஏற்பட்டால் தொடர்ச்சியான சந்திப்புகளும் நிகழ வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.