Home Featured நாடு ‘ஆலயங்களில் ஓய்வெடுங்கள் – அரசியல் வேண்டாம்’ – பெர்சே பங்கேற்பாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்!

‘ஆலயங்களில் ஓய்வெடுங்கள் – அரசியல் வேண்டாம்’ – பெர்சே பங்கேற்பாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்!

626
0
SHARE
Ad

012655957கோலாலம்பூர் – வழிபாட்டுத் தளங்களான இந்து மற்றும் புத்த ஆலயங்களில் ஓய்வெடுக்க யாருக்கு வேண்டுமானாலும் அனுமதி உண்டு என்று மலேசிய இந்து சங்க ஆலோசகர் டத்தோ ஏ. வைத்தியலிங்கம் மற்றும் ஸ்ரீலங்கா புத்த ஆலயத்தின் தலைமைத் துறவி பி. ஸ்ரீ சரணன்கரா நாயக மஹா தேரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எனினும், அந்தப் புனித ஸ்லங்களில் நுழைபவர்கள் தங்களது ‘அரசியலை’ அங்கே கொண்டுவரக் கூடாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கும் பெர்சே 4.0 பேரணியை முன்னிட்டு, ஆலயங்களின் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று ஆலய நிர்வாகக் குழுவிற்கு கோரிக்கைகள் வந்திருப்பதைத் தொடர்ந்து வைத்தியலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ஓய்வெடுக்க விரும்புபவர்கள், தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் தாராளமாக ஆலயங்களுக்குள் சென்று ஓய்வெடுக்கலாம். எனினும், வழிபாட்டுத் தளங்களில் கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் மதிப்பளித்து நடக்க வேண்டும்.” என்று வைத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது குறித்து ஸ்ரீ சரணன்கரா கூறுகையில், “பெர்சே பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே ஆலயங்களில் ஓய்வெடுக்க அனுமதி உண்டு. எனினும் அவர்கள் அங்கு அமைதியுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Mohan shanகடந்த செவ்வாய்கிழமை, மலேசிய புத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிஸ் ஆலோசனைக் குழுவின் இடைக்காலத் தலைவர் டத்தோ ஆர்.எஸ் மோகன் ஷான் வெளியிட்ட அறிக்கையில், பெர்சே 4 பேரணியில் கலந்து கொள்பவர்கள் ஓய்வெடுக்க ஆலயங்களின் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று ஆலயங்களுக்கு கோரிக்கை விடுக்கப்போவதாகத் தெரிவித்தார்.

மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் பெர்சே 4 பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.