அப்படியான செயலிகள் திறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டவுடன், அந்த செயலி வழக்கமான செயல்பாட்டுடன் இயங்கினாலும், அவை மிக எளிதாக பயனரின் திறன்பேசியை ஹேக்கர்களின் கருவியுடன் ரூட் செய்துவிடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை பயனர்களின் திறன்பேசி ரூட் செய்யப்பட்டால் திறன்பேசியில் பயனர்களின் ஒட்டுமொத்த செயல்பாடும் குறிப்பிட்ட ஒரு கருவியில் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மற்றொரு அதிர்ச்சிகரமான ஒன்று என்னவென்றால் இந்த மால்வேர் ஒருமுறை திறன்பேசியில் ஊடுருவி விட்டால் அதனை நீக்கவே முடியாது என்பது தான். வங்கியில் இருந்து ஒட்டுமொத்த பண ரீதியிலான செயல்பாடுகளும் திறன்பேசியில் மாறிவிட்ட நிலையில், பயனர்கள் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது என எச்சரிக்கப்பட்டுள்ளது.