Home Featured நாடு 45 நிமிடங்கள் நீடித்த விசாரணை: கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த மகாதீர்!

45 நிமிடங்கள் நீடித்த விசாரணை: கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த மகாதீர்!

480
0
SHARE
Ad

Mahathir (500x333)கோலாலம்பூர் – சுமார் 45 நிமிடங்கள் நீடித்த காவல்துறை விசாரணையில் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டு, துணிச்சலோடு அங்கிருந்து நகர்ந்துள்ளார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்.

விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொள்ள, மெல்லிய புன்னகையை உதிர்த்தபடி அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார் அந்த 90 வயதான மூத்த அம்னோ தலைவர்.

“என்னிடம் அவர்கள் கேள்விகள் கேட்டார்கள். நான் பதிலளிக்கமாட்டேன் என்று கூறினேன். நான் எதையும் மறைக்கவில்லை” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனால் உங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களே? என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், “அது அவர்கள் பாடு.. எனக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை வெளியேற்ற அம்னோவில் இருந்து மகாதீர் விலகுவார் என்ற ஆரூடங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவர், ” இல்லை, அது என்னுடைய கட்சி” என்று சிரித்தபடி பதிலளித்துள்ளார்.

கோலாலம்பூரிலுள்ள யாயாசான் அல் புக்காரி கட்டிடத்தில் இன்று மகாதீரிடம் காவல்துறை விசாரணையை மேற்கொண்டது.

அம்னோ தலைவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டது தொடர்பில் மகாதீரிடம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.