Home Featured நாடு டோனி புவாவுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் நோக்கம் இல்லை – சாடுகிறார் அருள் கந்தா

டோனி புவாவுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் நோக்கம் இல்லை – சாடுகிறார் அருள் கந்தா

504
0
SHARE
Ad

Arul-Kanda-Tony-Puaகோலாலம்பூர்- 1எம்டிபி விவகாரம் தொடர்பில் உண்மைகளை அறிந்து கொள்ளும் நோக்கம் டோனி புவாவுக்கு இல்லை என அருள் கந்தா சாடியுள்ளார்.

டோனி புவா தம்மை நேரடி விவாதத்துக்கு அழைத்ததில் அரசியல் நோக்கம் உள்ளது என அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

“பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் என்ற பொறுப்பை முன்வைத்து, அதன் பின்னே மறைந்து நிற்கும் டோனி புவா, தற்போது நேரடி விவாதத்தில் இருந்து விலகிவிட்டார். பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் பதவியை விட்டு விலகப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். நேரடி விவாதத்துக்கு நான் ஒப்புக் கொள்ள வேண்டுமென ஆக்ரோஷமாக அவர் என்னை வலியுறுத்திய நிலையில், எந்தவித நிபந்தனையும் இன்றி அதற்கு ஒப்புக் கொண்டேன். ஆனால் பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் பதவியை முன்வைத்து, என்னுடன் விவாதம் நடத்தப் போவதில்லை என அவர் கூறிவிட்டார்.”

#TamilSchoolmychoice

“எனவே உண்மை அறியும் நோக்கம் அவருக்கு இல்லை என்றும், அரசியல் ரீதியிலான தூண்டுதலின் பேரிலேயே அவர் எனக்கு சவால் விடுத்துள்ளார் என்றும் நான் சந்தேகிக்கிறேன். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள டோனி புவாவுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள் நன்றாகத் தெரிந்திருக்கும். மேலும் இப்படியொரு விவாதம் நடைபெற வாய்ப்பில்லை என்பதையும் அவர் அறிந்திருப்பார்.
“பொதுக் கணக்குக் குழுவில் இருந்து டோனி புவா விலகி, அவருக்குப் பதில் ரஃபிசி ரம்லியை ஏன் அக்குழுவில் உறுப்பினராக சேர்க்கக் கூடாது? ஏனெனில் டோனி புவாதான் எனக்கு நேரடியாக சவால் விடுத்தவர். எனினும் ரம்லி நல்ல பேச்சாளர், விவாதம் புரியக்கூடியவர்,” என அருள் கந்தா தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.