Home Featured நாடு “தடை விதித்தாலும் நான் இன்னும் சபாவை நேசிக்கிறேன்” – நூருல் இசா கருத்து!

“தடை விதித்தாலும் நான் இன்னும் சபாவை நேசிக்கிறேன்” – நூருல் இசா கருத்து!

563
0
SHARE
Ad

Nurul Izzahகோலாலம்பூர் – சுலு இளவரசியை தான் சந்தித்த விவகாரத்தில் சட்டமன்றத்தின் முடிவை ஏற்று, சபாவிற்குள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்தாலும் கூட இன்னும் தான் சபாவை நேசிப்பதாக பிகேஆர் உதவித்தலைவர் நூருல் இசா தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு லஹாட் டத்துவில் ஊடுருவிய சுலு படைகளை அழிக்க, மலேசியப் பாதுகாப்புப் படை நடத்திய சண்டையில் 10 மலேசிய வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டிற்காக தங்களது உயிரைத் தியாகம் செய்த அவர்களை அவமரியாதை செய்வது போல், நூருல் இசாவும், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவும் சுலு இளவரசியுடன் நட்பு பாராட்டி வருவதாக சபா மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், சபா மக்களிடம் நூருல் இசா மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

 

“நான் சட்டமன்றத்தின் முடிவை ஏற்க வேண்டும். ஆனால் சபாவின் மீதான எனது அன்பு தொடர்ந்து இருக்கும்” என்று நூருல் தெரிவித்துள்ளார்.