Home Featured நாடு தவறான தகவல்களை வெளியிடுகிறார் மகாதீர்: 1எம்டிபி வருத்தம்!

தவறான தகவல்களை வெளியிடுகிறார் மகாதீர்: 1எம்டிபி வருத்தம்!

522
0
SHARE
Ad

mole-TUN-DR-MAHATHIR-(Photo-by-Hussein-Shaharuddin-for-The-Mole)கோலாலம்பூர்-1எம்டிபி குறித்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடர்ந்து தவறான தகவல்களை வெளியிட்டு வருவது வருத்தமளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மகாதீரின் அந்த தவறான தகவல்கள் கொண்ட அறிக்கைகளை ஆராயாமல், ஊடகவியல் ரீதியில் விசாரிக்காமல், சில இணைய ஊடகங்கள், பொறுப்பற்ற முறையில் வெளியிடுவதாக 1எம்டிபி குற்றம்சாட்டியுள்ளது.

எட்ரா குளோபல் எனர்ஜி பெர்ஹாட் நிறுவன விற்பனை தொடர்பில் வலைத்தளம் ஒன்றில் வெளியான பதிவு ஒன்றை சுட்டிக்காட்டியுள்ள அந்நிறுவனம், அந்தப் பதிவானது 1எம்டிபி விவகாரத்தை எப்படியாவது அரசியலாக்க வேண்டும் என்ற முயற்சியில் டாக்டர் மகாதீர் மீண்டும் தோல்வியுற்றிருப்பதை புலப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

1MDB“டாக்டர் மகாதீர் உண்மைகள் மற்றும் சரியான விவரங்களின் அடிப்படையில் தமது வாதங்களை முன்வைக்க வேண்டும். மாறாக, 1எம்டிபி மீதான அவரது தவறான அரசியல் நோக்கத்திலான தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இணைய செய்தி ஊடகங்கள் இனி துன் மகாதீரின் எந்தவொரு செய்தியை வெளியிடும் முன்பும், அது தொடர்பாக நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் தொடர்ந்து பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு மகாதீர் மக்களை ஏமாற்றி வருகிறார். 1எம்டிபியின் 42 பில்லியன் ரிங்கிட் தொகை மாயமானதாக அவர் கூறுகிறார். ஆனால் எட்ரா சொத்துக்களை விற்றதன் வகையில் 1எம்டிபியின் கடன் 17 பில்லியன் ரிங்கிட் அளவு குறைந்துள்ளது. இது ஒன்றே மகாதீர் முன்பும் சரி, தொடர்ந்தும் சரி தவறான தகவல்களை அளித்து வருவதை தெளிவுபடுத்தும்.” என்றும் 1எம்டிபி நிறுவன அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை 1எம்டிபியில் இருந்து வந்துள்ளதாக அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். ஆனால் 1எம்டிபியிடம் இருந்து எந்தவொரு தொகையும் பிரதமரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மூன்று முறை அறிக்கைகள் வழி தெளிவுபடுத்தி உள்ளது” என்றும் 1எம்டிபியின் அறிக்கையில் மேலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.