Home Featured கலையுலகம் டாம் குரூஸ் படத்திற்கு இசையமைக்கிறார் ரஹ்மான் – மீண்டும் துவங்கும் ஆஸ்கர் கனவு!

டாம் குரூஸ் படத்திற்கு இசையமைக்கிறார் ரஹ்மான் – மீண்டும் துவங்கும் ஆஸ்கர் கனவு!

613
0
SHARE
Ad

tom-cruiseநியூ யார்க் – கடந்த சில வருடங்களுக்கு முன்பு, உலக சினிமா ரசிகர்களை வியக்க வைத்த படம் ‘மம்மி’. எகிப்து பிரமீடு ரகசியங்கள், அதிபயங்கரமான மம்மிக்கள் ஆகியவை பற்றிய அந்த கதையை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில், அந்த படத்தை ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூசை வைத்து மீளுருவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அப்படி உருவாக இருக்கும் படத்திற்கு தான் இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஏற்கனவே ‘ஸ்லம்டாக் மில்லியனர்ஸ்’ படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி உள்ள ரஹ்மான், திகில் படமான ‘மம்மி’- ல் இசையமைத்தால், கண்டிப்பாக மீண்டும் ஒரு ஆஸ்கர் உறுதியென இந்திய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.