Home Featured இந்தியா ஐஎஸ் தீவிரவாதிகளின் அடுத்த குறி மோடியா?

ஐஎஸ் தீவிரவாதிகளின் அடுத்த குறி மோடியா?

568
0
SHARE
Ad

Airstrike_B_271115புது டெல்லி – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வீட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்த ஐஎஸ் இயக்கத் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியா மற்றும் ஈராக்கில் ஆளுமை செலுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், மெல்ல மெல்ல பல்வேறு நாடுகளிலும் தீவிரவாத தாக்குதலை தொடங்கி உள்ளனர். அதற்கு சமீபத்திய உதாரணம் தான் பிரான்ஸ்.

இந்நிலையில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில், 15 முக்கிய இடங்களில் ஐஎஸ் இயக்க தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த பல்வேறு திட்டங்களை வகுத்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

Narendra modiஅதில், குறிப்பாக டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி வீட்டின் மீது ஏவுகணைகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.  இதற்காக ஆளில்லா விமானங்களை அவர்கள் பயன்படுத்தலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதன் காரணமாக டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.