இதற்கிடையே ஏர் ஆசியா இந்தியா அடுத்த காலாண்டில் மீண்டும் லாபத்திற்கு திரும்பும் என டோனி பெர்னாண்டஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டோனி, ஏர் ஆசியா இந்தியாவில் 49 சதவீத பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மலேசியாவிலும் ஏர் ஆசியா நஷ்டக் கணக்கையே காட்டியது என்பது கூடுதல் தகவலாகும்.
இதற்கிடையே, இதுவரை நஷ்டத்தில் இயங்கி வந்த ஸ்பேஸ் ஜெட் நிறுவனம், ஏர் ஆசியா நஷ்டத்தை சந்தித்த அதே காலாண்டில் 23.8 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.