Home கலை உலகம் ஏ.ஆர் ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியர் விவாகரத்து!

ஏ.ஆர் ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியர் விவாகரத்து!

328
0
SHARE
Ad

சென்னை : திருமணமாகி 29 ஆண்டுகள் கடந்த நிலையில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் சினிமாத் துறையில் இயங்கி வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரின் மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

சாய்ரா பானுவின் வழக்கறிஞர் இந்தத் தகவலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

1995-ஆம் ஆண்டில் சாய்ரா பானுவைத் திருமணம் செய்து கொண்டார். சாய்ரா பானுவின் சகோதரியை மற்றொரு பிரபல நடிகர் ரகுமான் திருமணம் செய்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

திருமணம் புரிந்தது முதல் ரஹ்மான் – சாய்ரா பானு இடையில் எந்தவித சர்ச்சையும் இருந்ததில்லை. சாய்ரா பானு ஊடகங்கள் முன்னிலையிலும் எப்போதும் தன்னைக் காட்டிக் கொண்டதில்லை. அவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் என 3 பிள்ளைகள் உண்டு. ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது.

இந்நிலையில் கடந்த ஓராண்டாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகவும் அதன் காரணமாக விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் சாய்ரா பானுவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.