Home இந்தியா மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நிறைவு! பாலிவுட் நடிகர்கள் வாக்களிப்பு! முடிவுகள் நவம்பர் 23-இல்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நிறைவு! பாலிவுட் நடிகர்கள் வாக்களிப்பு! முடிவுகள் நவம்பர் 23-இல்!

178
0
SHARE
Ad
குடும்பத்தினருடன் வாக்களித்த சச்சின் தெண்டுல்கர்

மும்பை : பாலிவுட் சினிமா உலகின் தலைநகரம் மும்பை. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரும் கூட. அதன் காரணமாக, இன்று புதன்கிழமை (நவம்பர் 20) நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்கள் திரண்டு வந்து வாக்களித்தனர்.

ஷாருக்கான், சல்மான் கான், ஹேமமாலினி, ரன்பீர் கபூர், அக்‌ஷய் குமார், உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களுடன், இந்தியாவின் முதல் நிலை பணக்காரர் முகேஷ் அம்பானி தம்பதியரும் இன்றைய தேர்தலில் வாக்களித்தனர். பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரும் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

நடிகர் அக்‌ஷய் குமார்

வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிடத் தொடங்கியுள்ளன. எனினும் மே மாதம் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் வெளியிடப்பட்ட வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் சர்ச்சைக்குள்ளாயின. பல கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்தன. இதனால் வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் மீதான நம்பகத் தன்மை குறைந்தன.