Home நாடு ஏ.ஆர்.ரஹ்மான் இசைவிழா – இனத் துவேஷ கருத்துப் பதிவு – காவல் துறை விசாரணை

ஏ.ஆர்.ரஹ்மான் இசைவிழா – இனத் துவேஷ கருத்துப் பதிவு – காவல் துறை விசாரணை

612
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை (ஜனவரி 28) நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை விழா குறித்து இனத் துவேஷக் கருத்துகளைப் பதிவிட்டது குறித்து காவல் துறையினர் விசாரணைகளைத் தொடக்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் இந்தக் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு பரவலாகப் பகிரப்பட்டன.

காவல் துறை இது தொடர்பில் புகார் ஒன்றைப் பெற்றிருப்பதாக செராஸ் வட்டார காவல் நிலையத்தின் ஓசிபிடி துணை ஆணையர் சாம் ஹாலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், இதன் தொடர்பில் தகவல்கள் தெரிவிக்க விரும்புவோர் செராஸ் காவல் நிலையத்தை 03-92845050/5051 என்ற எண்ணிலும் கோலாலம்பூர் காவல் நிலையத்தை 03-21159999 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அல்லது தங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்திலும் இது குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்றும் சாம் ஹாலிம் ஜமாலுடின் கூறினார்.