பிப்ரவரி 4 & 5 தேதிகளில் ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் தைப்பூசத்தின் நேரலை ஒளிபரப்பைக் கண்டு மகிழுங்கள்
பத்து மலை, ஜார்ஜ்டவுன், ஈப்போ, சுங்கைப் பட்டாணி உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள ஆலயங்களில் இருந்து நேரலை ஒளிபரப்பு
2023 தைப்பூசம் பற்றிய விபரங்கள்:
• ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் பிப்ரவரி 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் தைப்பூசத்தின் நேரலை ஒளிபரப்பைக் கண்டு மகிழலாம்.
மேலும், அனைத்து மலேசியர்களும் தைப்பூசத்தின் நேரலை ஒளிபரப்பை ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்வதோடு பக்திக் கட்டுரைகளையும் வாசித்து மகிழலாம். பக்திப் பாடல்களை ராகா வானொலியில் கேட்டு மகிழலாம்.
• உள்ளூர் திறமையாளர்களான மீனா குமாரி, ரேவதி மாரியப்பன், மகேந்திரன், சிவராஜ் மற்றும் கண்ணா சிம்மாத்ரி ஆகியோர் தொகுத்து வழங்கும் தைப்பூசத்தின் நேரலை ஒளிபரப்பை வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் பின்வரும் நேரங்களில் கண்டுக் களிக்கலாம்:
*பிப்ரவரி 4-ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணி வரை,
* பிப்ரவரி 5-ஆம் தேதி காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை.
• பின்வரும் ஆலயங்கள் உட்ப்பட உள்ளூர் ஆலயங்களில் இருந்து நேரலை ஒளிபரப்பு வழங்கப்படும்:
*பத்து மலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி தேவஸ்தானம் (கோம்பாக், சிலாங்கூர்)
*அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் (ஜார்ஜ்டவுன், பினாங்கு)
*கல்லுமலை ஆலயம் (ஈப்போ, பேராக்)
* ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் ஆலயம் (சுங்கை பெட்டானி, கெடா).
• பின்வரும் ஆலயங்கள் உட்ப்பட வாடிக்கையாளர்கள் உலகெங்கிலும் உள்ளக் கோவில்களில் இருந்து நேரலை ஒளிபரப்பைக் கண்டு இரசிக்கலாம்:
*இந்தியா: அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலயம் (திருச்செந்தூர்), அருள்மிகு தண்டாயுதபா சுவாமி ஆலயம் (பழனி), அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலயம் (திருத்தணி), மற்றும் அருள்மிகு சுவாமிநாதசுவாமி ஆலயம் (சுவாமிமலை)
o அந்தமான்: ஸ்ரீ வெற்றிமலை முருகன் ஆலயம் (போர்ட் பிளேர்), மற்றும் அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் (ரத்னகிரி)
o இலங்கை: இணுவில் கந்தசுவாமி ஆலயம் (ஜஃப்னா – யாழ்ப்பாணம்)
o மொரீஷியஸ்: பராசக்தி பீடம் காளிக்கோவில் (செபல்)
o தென்னாப்பிரிக்கா: சிவசுப்ரமணிய ஆலயம் மெல்ரோஸ் (ஜோகன்னஸ்பர்க்).
• மேலும், அனைத்து மலேசியர்களும் தைப்பூசத்தின் நேரலை ஒளிபரப்பை ஆஸ்ட்ரோ உலகம் மின்னியல் தளம் வாயிலாக ஸ்ட்ரீம் செய்வதோடுப் பக்திக் கட்டுரைகளையும் வாசித்து மகிழலாம்.
• வானொலி முண்ணனியில், மலேசியர்கள் 24 மணி நேரப் பக்திப் பாடல்களை ராகா வாயிலாக வானொலி அல்லது SYOK செயலி வழியாகக் கேட்டு மகிழலாம்.
• மேல் விபரங்களுக்கு ஆஸ்ட்ரோ உலகம் எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.