Home Featured தமிழ் நாடு தேர்தல் கருத்துக் கணிப்பின் பின்னணியில் திமுக – குட்டை உடைத்த லயோலா!

தேர்தல் கருத்துக் கணிப்பின் பின்னணியில் திமுக – குட்டை உடைத்த லயோலா!

564
0
SHARE
Ad

stalin_1402131fசென்னை – தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவைக் காட்டிலும் திமுக அதிக இடங்கள் பெற்று ஆட்சி அமைக்கும் என லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்களின் ‘பண்பாடு மக்கள் தொடர்பகம்’ நேற்று கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. முதல்வராக, கருணாநிதிக்கே மக்கள் ஆதரவளித்து இருக்கின்றனர் என்றும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், அந்த கருத்துக் கணிப்பின் பின்னணியில் திமுக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை லயோலா கல்லுாரி நிர்வாகம், “பண்பாடு மக்கள் தொடர்பக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டதாகக் கூறியிருக்கும் கருத்துக் கணிப்புக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்களோ அல்லது இந்நாள் மாணவர்களோ, கல்லுாரி நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று கருத்துக் கணிப்பு எதையும் எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நேற்று அந்த இயக்கத்தினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது, அவர்களுடன் இருந்தவர்களில் பெரும்பான்மையினர், ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக, இந்தக் கருத்துக் கணிப்பின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.