Home Featured நாடு முன்னாள் மலாக்கா முதலமைச்சர் மீதான தேச நிந்தனைக் குற்றச்சாட்டை நீக்கக் கோரி கடிதம்!

முன்னாள் மலாக்கா முதலமைச்சர் மீதான தேச நிந்தனைக் குற்றச்சாட்டை நீக்கக் கோரி கடிதம்!

587
0
SHARE
Ad

rahim-thamby-chik2கோலாலம்பூர் – முன்னாள் மலாக்கா முதலமைச்சர் அப்துல் ரஹீம் தம்பி சீக்கிற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் தேச நிந்தனை வழக்கை திரும்பப் பெறுமாறு, அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அந்தக் கடிதம் குறித்த விசாரணையை வரும் மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி சலாமட் யாஹ்யா தெரிவித்துள்ளார்.

“அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் தேச நிந்தனை வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு நாங்கள் முறையீடு செய்கின்றோம். காரணம் அவரது செயலில் தேச நிந்தனை நோக்கம் இல்லை” என்று அப்துல் ரஹீமின் வழக்கறிஞர் வான் அஸ்மிர் வான் மஜித் இன்று ஷா ஆலம் அமர்வு நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அப்துல் ரஹீம் தனது பேஸ்புக் பதிவில், “சிலாங்கூர் பட்டத்து இளவரசர், தெங்கு அமிர் ஷா கத்தோலிக்க மதத்திற்கு மாறிவிட்ட செய்தி உலகத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களையும், நமது நாட்டிலுள்ள முஸ்லிம்களும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சோகச் செய்தி மெக்காவிலும், அரபாவிலும் இரண்டு மிகப் பெரிய பேரிடர்களை ஏற்படுத்தியுள்ளது. வேட்டிகன் நகரின் போப் ஆண்டவரை சந்திக்க எண்ணும் சிலாங்கூர் சுல்தானின் கனவும் நனவாகட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிலாங்கூர் அரண்மனை உடனடியாக அப்துல் ரஹீமிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.