Home Featured நாடு தேச நிந்தனை குற்றச்சாட்டின் கீழ் ஹிஷாமுடின் ராய்சுக்கு 9 மாதங்கள் சிறை!

தேச நிந்தனை குற்றச்சாட்டின் கீழ் ஹிஷாமுடின் ராய்சுக்கு 9 மாதங்கள் சிறை!

624
0
SHARE
Ad

hishamuddin-raisகோலாலம்பூர் – நாட்டின் பிரபலமான சமூகப் போராட்டவாதிகளில் ஒருவரான ஹிஷாமுடின் ராய்ஸ் (படம்) கடந்த மே 13, 2013ஆம் நாள் ஆற்றிய ஓர் உரை தேச நிந்தனைக்குரியது என்று தீர்ப்பளித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அவருக்கு 9 மாதம் சிறைத்தண்டனை விதித்தது.

கடந்த ஜனவரி 9ஆம் தேதி இதே குற்றத்திற்காக ஹிஷாமுடினுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 5,000 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. அந்தத் தண்டனை போதாது என்றும் அதனை அதிகரிக்க வேண்டும் என்றும் அரசாங்கத் தரப்பு மேல் முறையீடு செய்ததைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்தது.

இருப்பினும், ஹிஷாமுடினின் வழக்கறிஞர் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து இந்தத் தண்டனைக்கு இடைக்காலத் தடையுத்தரவை நீதிபதி வழங்கினார். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை ஹிஷாமுடினுக்கு 6,000 ரிங்கிட் பிணை (ஜாமீன்) தொகை நிர்ணயித்தும் நீதிபதி டத்தோ நோர்டின் ஹாசான் தீர்ப்பளித்தார்.

#TamilSchoolmychoice

ஹிஷாமுடின் புரிந்த குற்றத்திற்கேற்ற தண்டனை 5,000 ரிங்கிட் அபராதம் மட்டும் போதாது என்று கூறிய நீதிபதி அதே போன்ற ஒரு குற்றத்தை அவர் மீண்டும் புரியாமல் இருக்க அவரைத் தடுக்கும் வகையில் தண்டனை அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரித்துத் தன்னைக் குற்றமற்றவன் எனத் தீர்ப்பு கூற வேண்டும் என ஹிஷாமுடின் செய்திருந்த மேல்முறையீட்டையும் உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.

ஹிஷாமுடினின் உரை தேச நிந்தனைக்கு உரியதாக இருந்தது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கின்றார்.