Home Featured உலகம் மேற்கு ஆப்பிரிக்க நாடு பர்கினா ஃபாசோ – தீவிரவாதத் தாக்குதலில்  20 பேர் கொல்லப்பட்டனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடு பர்கினா ஃபாசோ – தீவிரவாதத் தாக்குதலில்  20 பேர் கொல்லப்பட்டனர்.

879
0
SHARE
Ad

குவாகாடோகா: அல் கய்டா இஸ்லாமியத் தீவிரவாதிகள் நேற்று தொடுத்த தாக்குதலில் பர்கினா ஃபோசோ நாட்டின் தலைநகரான குவாகாடோகாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

Burkina Faso-mapபர்கினோ ஃபாசோ மேற்கு ஆப்பிரிக்காவில் சுற்றிலும் நிலப் பிரதேச நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும். அதனைச் சுற்றி மாலி, நைகர், பெனின் உட்பட ஆறுநாடுகள் எல்லைகளைக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தாக்குதலில் இதுவரை 15 பேர் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

ஸ்பெலெண்டிட் ஹோட்டல் எனப்படும் தங்கும் விடுதியை நோக்கித் துப்பாக்கித் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை தீ வைத்துக் கொளுத்தினர். அதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை வந்தடைந்தபோது, கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன.

இதனைத் தொடர்ந்து குவாகாடோகா நகர் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரான்ஸ் நாட்டின் காலனித்துவ நாடான பர்கினா ஃபாசோவில் ஏறத்தாழ 3,500 பிரெஞ்சு நாட்டினர் வசித்து வருகின்றனர். இவர்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

உலகளாவிய அளவில் பல நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

கடந்த வியாழக்கிழமைதான் இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் தீவிரவாதத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.