Home Featured கலையுலகம் பாலிவுட் காதல் ஜோடி ரன்பீர் கபூர்-கத்ரினா கைஃப் பிரிந்தனர்!

பாலிவுட் காதல் ஜோடி ரன்பீர் கபூர்-கத்ரினா கைஃப் பிரிந்தனர்!

759
0
SHARE
Ad

ranbir-kapoor-katrina-kaifமும்பை – பாலிவுட் திரையுலகில் இரசிகர்களுக்கு மட்டுமல்ல கதாநாயகர்களுக்கும் கனவுக் கன்னியாகத் திகழ்பவர் கத்ரினா கைஃப். சல்மான் கான் தொடங்கி பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட கத்ரினா, ஆகக் கடைசியாக ரன்பீர் கபூர் கபூருடன் இணைத்துப் பேசப்பட்டார்.

ரன்பீருடன் திருமணம் என்றும், அவரது குடும்பத்தினரின் சம்மதத்தையும் கத்ரினா பெற்றுவிட்டார் என்றும்கூட கூறப்பட்டது. ஒரே வீட்டில் தங்குகின்றார்கள், வெளிநாடுகளில் தேனிலவு கூட தொடர்கின்றது என்றெல்லாம் கூட செய்திகள் வெளிவந்தன.

Katrina Kaif-Ranbir Kapoor-overseasவெளிநாடு ஒன்றில் ரன்பீரும், கத்ரினாவும் காதலர்களாக சுற்றித் திரிந்த போது…

#TamilSchoolmychoice

இருவரும் வெளிநாடுகளில் நெருக்கமாகச் சுற்றித் திரியும் புகைப்படங்கள் கூட இணையத் தளங்களில் வெளியிடப்பட்டன.

ஆனால், இன்று இந்தியாவின் சில இணைய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் படி, ரன்பீரும், கத்ரினாவும் பிரிந்து விட்டனர், அவர்கள் ஒரே வீட்டில் தங்கவில்லை என செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்பாக, ரன்பீர் தனது பெற்றோருடன் சேர்ந்து தங்க, தனது வீட்டிற்கே திரும்பி விட்டாராம்.

அந்த நாளில் ‘பாபி’ போன்ற படங்களின் மூலம் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த ரிஷி கபூர், மற்றும் முன்னணி நடிகை நீட்டு சிங் ஆகியோரின் மகன்தான் ரன்பீர் கபூர்.

இதனைத் தொடர்ந்து இனி கத்ரினாவின் அடுத்த காதலர் யார் என்ற ஆரூடங்களைத் தகவல் ஊடகங்கள் கூடிய விரைவில் தொடங்கி விடும்.

Ranbir-katrina-