வேலூர் – வேலூரில் தேமுதிக சார்பில் நடந்த பொங்கல் விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஆபாசமாகத் திட்டியதாக பிரபல ஊடகத்தில் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த விழாவில் விஜயகாந்த் பேசுகையில், ”இங்கு நடந்த தப்பாட்டம் நடனத்தை பார்த்து எனக்கு பழைய நினைவுகள் வருகிறது. எனக்கும் ஆடனும் போல தோன்றியது. ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதுவதே பெரிய வேலையாக இருக்கின்றது. இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என கடந்த ஆண்டு ஜெயலலிதா சொன்னார். அதை இப்போது செய்திருக்கிறாரா?”
“மாடும், குதிரையும் ஒன்று தான். மாட்டுக்கும், குதிரைக்கும் ரேஸ் (போட்டி) வைத்தால் இரண்டும் தாவி தாவி போகும். அதேபோல், ஜல்லிக்கட்டின்போது மாடு பிடி வீரர்கள் மாட்டுக்கு கீழே படுத்துக்கொண்டால்கூட மாடு எகிறி போய் விடும்” என்றவர், முதல்வர் ஜெயலலிதாவை ஆபாசமாக பேசியதாகக் கூறப்படுகிறது.
எனினும், அவர் ஆபாசமாகப் பேசியது பிரசுரிக்க முடியாத அளவில் இருப்பதாக அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.