Home Featured இந்தியா தம்படம் (செல்ஃபி) பலி – இந்தியா முதலிடம்!

தம்படம் (செல்ஃபி) பலி – இந்தியா முதலிடம்!

664
0
SHARE
Ad

selfieவாஷிங்டன் – உலக அளவில் செல்ஃபி (தம்படம்) எடுக்கும் போது எதிர்பாராதவிதமாக பலியாவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

அந்த அறிக்கையில், “கடந்த 2015-ம் ஆண்டில், உலக அளவில் தம்படம் எடுக்கும் போது பலியானவர்களில் எண்ணிக்கை 27. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரயில் வரும்போது செல்ஃபி எடுப்பது, 60 அடி உயரமான கட்டிடத்தில் இருந்து செல்ஃபி எடுப்பது என ஆபத்தான பகுதிகளில் விபரீதம் அறியாமல் நடந்து கொண்டதால் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையில் 16 சுற்றுலாத் தளங்களில் தம்படம் எடுக்க காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும், நகர நிர்வாக அதிகாரிகளிடம் தம்படம் விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.