நியூயார்க் – நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச் சந்தை 400 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது, உலகமெங்கிலும் பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஒரு கட்டத்தில் 537 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்ட, டௌ ஜோன்ஸ் எனப்படும் அமெரிக்க சந்தை நேற்று மூடப்பட்டபோது, 391 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க பங்கு சந்தையைப் பொறுத்தவரை ஒரு சில புள்ளிகள் கீழ் இறங்கினால், அதனால், பல கோடி ரிங்கிட் மதிப்பை பட்டியலிடப்பட்டுள்ள பல நிறுவனங்கள் இழக்கும் என்பது வணிக விதியாகும்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்த நிலைமைக்கு அமெரிக்க பங்குச் சந்தை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க பங்குச் சந்தை எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதைக் காண உலக பொருளாதார நிபுணர்கள் ஆவலுடன் காத்திருப்பர்.