கோலாலம்பூர் – பத்துமலையில் இந்தியக் கலாச்சார மையம் அமைப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டிருப்பதால், சுற்றாலாத்துறையின் வளர்ச்சிக்குப் பாதகமாக இருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று பத்துமலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டாக்டர் சுப்ரா, “மாநில அரசாங்கம் உண்மையில் அதை எதிர்க்கிறது என்றால், அவர்கள் பத்துமலையின் வளர்ச்சிக்கும், சுற்றுலாத்துறைக்கும் உதவவில்லை என்று கூறலாம். தேசிய சுற்றுலாத்துறைக்கு எதிராக செயல்படுவதற்கு அவர்கள் அரசியலை காரணம் காட்ட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பாதுகாப்பும், சுற்றுச்சூழலும் சரியாக இருக்கும் பட்சத்தில் கேபிள் கார் திட்டத்திற்கும் அனுமதியளிக்க வேண்டும் என்றும் சுப்ரா வலியுறுத்தியுள்ளார்.