Home Photo News கேன்ஸ் படவிழாவில் கத்ரினா கைஃப், மல்லிகா ஷெரவாத் அழகு பவனி! (படக் காட்சிகள்)

கேன்ஸ் படவிழாவில் கத்ரினா கைஃப், மல்லிகா ஷெரவாத் அழகு பவனி! (படக் காட்சிகள்)

1059
0
SHARE
Ad

கேன்ஸ், மே 25 – நேற்றுடன் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடந்து முடிந்த 68வது கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகைகள் கத்ரினா கைஃப், கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெரவாத் ஆகியோர் கலந்து கொண்டு, தங்களின் கவர்ச்சிகரமான ஆடை அலங்காரத்துடன் அழகு பவனி வந்தனர். அந்தப் படக் காட்சிகள் உங்களின் பார்வைக்கு:-La Tete Haute Premiere - 68th Cannes Film Festivalதிரைப்படம் ஒன்றின் சிறப்புத் திரையீட்டுக்கு வருகை தந்த கத்ரினா கைப், சிவப்புக் கம்பள வரவேற்பில் ஒய்யாரமாக அழகு காட்டி நிற்கின்றார்.

La Tete Haute Premiere - 68th Cannes Film Festivalஇதற்கு முன் பல பாலிவுட் கதாநாயகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட இந்த கத்ரினா கைஃப்தான் தற்போது பிரபல பாலிவுட் நடிகரும், முன்னாள் கதாநாயகன் ரிஷி கபூரின் மகனுமான ரன்பீர் கபூரிடம் காதல் வசப்பட்டிருக்கின்றார் என்றும் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறும் என்றும் பாலிவுட் ஆரூடங்கள் தெரிவிக்கின்றன.

Mad Max: Fury Road Premiere - 68th Cannes Film Festivalஇன்னொரு வித்தியாச ஆடை அலங்காரத்துடன் கத்ரினா கைஃப்..

#TamilSchoolmychoice

La Tete Haute Premiere - 68th Cannes Film Festivalவழக்கமாக ஆண்டுதோறும் பாலிவுட் நட்சத்திரங்கள் படையெடுக்கும் இந்த கேன்ஸ் உலகத் திரைப்பட விழா மே 13 தொடங்கி மே 24 வரை நடைபெற்றது.

Mad Max: Fury Road Premiere - 68th Cannes Film Festivalகத்ரினா கைஃப் புகைப்படக்காரர்களுக்கு அழகு காட்டி நிற்கின்றார்

????????????????????????????????கேன்ஸ் படவிழாவில் ‘மேட் மேக்ஸ்’ (Mad Max: Fury Road) என்ற ஆங்கிலப் படத்தின் சிறப்புத் திரையீட்டிற்கு கடந்த மே 14ஆம் தேதி வருகை தந்தபோது பாலிவுட்டின் கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெரவாத்

Mad Max: Fury Road Premiere - 68th Cannes Film Festivalஜேக்கி சானுடன் ஆங்கிலப் படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் திரைப்பட இரசிகர்களைக் கவர்ந்தவர் மல்லிகா ஷெரவாத்…

Mad Max: Fury Road Premiere - 68th Cannes Film Festivalகாற்றில் அலைபாயும் நீண்ட ஆடையுடன் மல்லிகா ஷெரவாத் புகைப்படக்காரர்களுக்கு தோற்றம் காட்டி நிற்கின்றார்.