கான்ஸ் – பிரான்ஸ் நாட்டின் பிரபல சுற்றுலா நகரான கான்ஸ் திரைப்பட விழா கடந்த மே 8-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது.
எதிர்வரும் மே 19-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகப் புகழ் பெற்ற திரைப்பட விழாவில் உலகம் எங்கிலும் இருந்து பிரபல சினிமா நட்சத்திரங்களும், இந்திய நட்சத்திரங்களும் குழுமியுள்ளனர்.

இந்திய நட்சத்திர நடிகைகளும் வழக்கம்போல் இந்தப் படவிழாவில் கலந்து கொண்டு தங்களின் கவர்ச்சியால் கலக்கி வருகின்றனர்.
ஐஸ்வர்யா ராய் இந்தப் படவிழாவில் ஆண்டுதோறும் கலந்து கொள்ளும் வழக்கமுடையவர்.
இந்த முறை மற்றொரு பிரபல இந்தி நடிகை தீபிக்கா படுகோனும் கலந்து கொண்டார்.

சிவப்புக் கம்பள வரவேற்பில் அவர்கள் அழகுநடை நடந்து வர புகைப்படக்காரர்கள் அவர்களை மொய்த்தனர். அந்தப் படங்களை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர் இந்த சினிமா பிரபலங்கள்.