Home One Line P2 ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்தியாவும் மருத்துவமனையில் அனுமதி

ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்தியாவும் மருத்துவமனையில் அனுமதி

1059
0
SHARE
Ad

மும்பை – ஐஸ்வர்யா ராய், அவரது எட்டு வயது மகள் ஆரத்தியா இருவரும் கொவிட்-19 தொற்று பாதிப்பினால் மும்பை நானாவதி மருத்துவமனையில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) அனுமதிக்கப்பட்டனர்.

அதே மருத்துவமனையில்தான் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சானும், அமிதாப் பச்சனும் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆரத்தியா பச்சானுக்கும் கொரொனா தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

#TamilSchoolmychoice

இன்று அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிவித்தது.

ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சான் அவரது தந்தையார் அமிதாப் பச்சானுக்கும், ஆகியோருக்கும் கொரொனா தொற்று கண்டிருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பையிலுள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூச்சுத் திணறலால் அவதிப்படுவதாக அமிதாப் கூறிய காரணங்களால் அவர் கொண்டுவரப்பட்டிருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.