Home One Line P2 கொவிட்-19 : முதன் முறையாக 100 மணி நேரத்தில் 1 மில்லியன் பாதிப்புகள்

கொவிட்-19 : முதன் முறையாக 100 மணி நேரத்தில் 1 மில்லியன் பாதிப்புகள்

631
0
SHARE
Ad

வாஷிங்டன் : நேற்று வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 17) உலகமெங்கிலும் கொவிட் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 14 மில்லியனைக் கடந்தது.

அதே வேளையில் வரலாற்றில் முதன்முறையாக 100 மணி நேரத்திற்குள்ளாக 1 மில்லியன் பாதிப்புகள் அதிகரித்திருக்கும் அவலமும் ஏற்பட்டது.

ஜனவரியில் சீனாவில் முதல் கொவிட்-19 பாதிப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை 1 மில்லியனாக அதிகரித்தது.

#TamilSchoolmychoice

ஜூலை 13-ஆம் தேதி உலகின் மொத்த பாதிப்புகள் 13 மில்லியனாக அதிகரித்தது. அடுத்த நான்கு நாட்களிலேயே அந்த எண்ணிக்கை 14 மில்லியனாக உயர்ந்தது.

இப்போது 100 மணி நேரத்திற்குள்ளாக 1 மில்லியன் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் மட்டும் 3.6 மில்லியன் பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டும் 77 ஆயிரம் புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டன.

உலகம் எங்கிலும் கொவிட்-19 தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 7 மாதங்களில் 600,000 ஆக அதிகரித்திருக்கிறது.

சீனாவில் முதல் மரணம் ஜனவரி 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளில் அதிகமான உயிர்ப் பலிகளை ஏற்படுத்தியது கொவிட்-19.

அங்கு கொவிட்டின் தாண்டவம் தணிந்திருக்கிறது. ஆனால் அமெரிக்காவிலும் பிரேசில் போன்ற தென் அமெரிக்க நாடுகளிலும் கொவிட்-19 தொற்றின் பரவல் மிகத் தீவிரமடைந்திருக்கிறது.