அமிதாப், மும்பையிலுள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் நேற்று சனிக்கிழமை (ஜூலை 11) முதல் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மூச்சுத் திணறலால் அவதிப்படுவதாக அவர் கூறிய காரணங்களால் அவர் கொண்டுவரப்பட்டிருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.
தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்ட அமிதாப் “நான் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனது குடும்பத்தினரும், பணி உதவியாளர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். என்னுடன் கடந்த 10 நாட்களில் நெருக்கமாகப் பழகியவர்கள் அனைவரும் உடனடியாக கொவிட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
பரிசோதனைகளைத் தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சானுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
எனினும், அபிஷேக்கின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்தியா, அமிதாப்பின் மனைவி ஜெயா பாதுரி ஆகியோருக்கு கொவிட் தொற்று இல்லை என்பது பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளது.