Home One Line P2 ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்தியாவுக்கும் கொவிட்-19 தொற்று

ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்தியாவுக்கும் கொவிட்-19 தொற்று

1048
0
SHARE
Ad

மும்பை – இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆரத்தியா பச்சானுக்கும் கொரொனா தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர் நேற்றைய தகவல்களின்படி ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சான் அவரது தந்தையார் அமிதாப் பச்சானுக்கும், ஆகியோருக்கும் கொரொனா தொற்று கண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் மும்பையிலுள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூச்சுத் திணறலால் அவதிப்படுவதாக அமிதாப் கூறிய காரணங்களால் அவர் கொண்டுவரப்பட்டிருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், ஐஸ்வர்யா ராயும், மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா அல்லது வீட்டிலிருந்தபடியே தனித்திருக்க வேண்டுமா என்ற மருத்துவ ஆலோசனைகளை அமிதாப் குடும்பத்தினர் பெற்று வருகின்றனர் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

அமிதாப்பின் இல்லம் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டுவிட்டரில் பதிவிட்ட அமிதாப் பச்சான்

தனக்கு கொரொனா தொற்று இருப்பது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார் அமிதாப்.

“நான் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனது குடும்பத்தினரும், பணி உதவியாளர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். என்னுடன் கடந்த 10 நாட்களில் நெருக்கமாகப் பழகியவர்கள் அனைவரும் உடனடியாக கொவிட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டார்.

பரிசோதனைகளைத் தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சானுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.