Home தேர்தல்-14 பகாங் திருப்பம்: வான் ரோஸ்டி மந்திரி பெசாராக நியமனம்

பகாங் திருப்பம்: வான் ரோஸ்டி மந்திரி பெசாராக நியமனம்

1013
0
SHARE
Ad
பகாங் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில்

பெக்கான் -பகாங் மாநிலத்தில் எதிர்பாராத திருப்பமாக ஜெலாய் சட்டமன்றத்தின் உறுப்பினர் டத்தோ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 4 தவணைகளாக மந்திரி பெசாராக இருந்த அட்னான் யாக்கோப் மீண்டும் நியமிக்கப்பட பகாங் அரண்மனை அனுமதி வழங்கவில்லை. முதலில் அட்னான் யாக்கோப்தான் மந்திரி பெசாராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி பகாங் மாநிலத்தில் மீண்டும் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைத்தது.

#TamilSchoolmychoice

42 சட்டமன்றங்களைக் கொண்ட பகாங் மாநிலத்தில் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் நிலைமை பின்வருமாறு:

தேசிய முன்னணி – 22

பாஸ் – 8

பிகேஆர் -5

இந்த வெற்றியைத் தொடர்ந்து பகாங் மாநிலத்தில் மீண்டும் தேசிய முன்னணி ஆட்சி அமைக்க அட்னான் யாக்கோப் மீண்டும் மந்திரி பெசார் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கேமரன் மலை நாடாளுமன்றத்தின் கீழ் வரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஜெலாய் ஒன்றாகும்.

60 வயதான வான் ரோஸ்டிக்கு பகாங் தெங்கு மக்கோத்தா தெங்கு அப்துல்லா சுல்தான் அகமட் ஷா மந்திரி பெசாருக்கான நியமனக் கடிதத்தை பெக்கானிலுள்ள இஸ்தானா அபு பாக்கார் அரண்மனையில் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

கடந்த தவணையில் பகாங் மாநில ஆட்சிக் குழுவில் வான் ரோஸ்டி பணியாற்றியிருக்கிறார்.

வான் ரோஸ்டியுடன் 8 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.