
பெங்களூரு – (மலேசியா நேரம் மாலை 7.00 மணி நிலவரம்)
கடந்த மே 12-ஆம் தேதி நடந்து முடிந்த கர்நாடகா மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளை வென்றாலும், ஜனதா தளம் அடுத்த ஆட்சி அமைக்கிறது.
முன்னாள் கர்நாடகா முதல்வர் தேவகவுடாவின் மகனான குமாரசாமி அம்மாநிலத்தின் முதல்வராகப் பதவி ஏற்கிறார்.
மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 38 தொகுதிகளை மட்டுமே வென்ற ஜனதா தளம் கட்சிக்கு 77 தொகுதிகளைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு தர முடிவு செய்ததைத் தொடர்ந்து, ஜனதா தளம் தலைவரான குமாரசாமி முதல்வராகப் பதவி ஏற்கிறார்.
பாஜகவை பதவி ஏற்க வழிவிடக் கூடாது என்ற வியூகத்துடன் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.