
கான்ஸ் – ஆண்டு தோறும் மே மாதத்தில் உலகம் எங்கும் உள்ள சினிமா நட்சத்திரங்கள், இரசிகர்கள் ஒரு யாத்திரை போன்று ஒருங்கே ஒன்று கூடும் திரைப்பட விழா – பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலுள்ள கடற்கரை நகரான கான்ஸ் நகரில் நடைபெறும் திரைப்பட விழா.
72-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழா கடந்த செவ்வாய்க்கிழமை மே 14-ஆம் தேதி தொடங்கியது.
இந்த விழாவின் மைய அங்கமாக அனைவரையும் கவர்வது விதம் விதமான ஆடை அணிகலன்களில் திரையுலக நட்சத்திரங்கள் சிவப்புக் கம்பள (ரெட் கார்பெட்) வரவேற்பில் தங்களின் அழகும், கவர்ச்சியும் தெரிய பவனி வருவது!

இந்த முறை நமது இந்திய நட்சத்திரங்கள் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் தங்களின் அசத்தலான ஆடை அணிகலன்களுடன் கான்ஸ் திரைப்பட விழாவைக் கலக்கி வருகின்றனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டால்லோனும் இந்த முறை கான்ஸ் திரைப்பட விழாவுக்கு வருகை தந்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் உலவி வரும் அந்தப் படக் காட்சிகளில் சில உங்களின் பார்வைக்கு:










-செல்லியல் தொகுப்பு