Home நாடு எஸ்ஆர்சி: 30 விழுக்காடு விசாரணை முடிந்து விட்டது!

எஸ்ஆர்சி: 30 விழுக்காடு விசாரணை முடிந்து விட்டது!

667
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதினெட்டாவது நாள் விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது.

முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார விதிமீறல் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார்கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இந்த வழக்கு குறித்த விசாரணை 30 விழுக்காடு முழுமைப் பெற்று விட்டதாக துணை பொது வழக்கறிஞர் டத்தோ வி. சிதம்பரன் தெரிவித்தார். மேலும், 40 சாட்யிங்கள் இதற்கு பிறகு விசாரிக்கப்பட உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுவரையிலும் 37 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுவிட்ட நிலையில் வருகிற மே 28-ஆம் தேதி மீனும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மே 28 தொடங்கி மே 29, ஜூன் 10 முதல் ஜூன் 14 வரை, ஜூன் 17 முதல் ஜூன் 21 வரை, ஜூலை 1 முதல் ஜூலை 3 வரை, பின்பு ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரையிலும் இந்த வழக்கு விசாரணைக்காக 39 நாட்கள் நீடிக்கும் என அவர் தெரிவித்தார்.