சுமார் ஐந்து இடங்களில் தற்போது கிராம மக்கள் அனைவருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு குறித்து சோதனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது குழந்தைகள் என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இ ந் நோய் பல்வேறு இடங்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் 2017-ஆம் ஆண்டு மட்டும், புதிதாக 20,000 பேர் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டனர். தற்போது ஆசிய அளவில் அதிக எச்ஐவி நோயாளிகளை கொண்டுள்ள இரண்டாவது நாடாக பாகிஸ்தான் உருவெடுத்துள்ளது.