இந்தப் படத்தில் யார் எந்தக் கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்ற விவரங்கள் சுவாரசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. காரணம், இந்த நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த நாவலைப் படித்தவர்களின் மனக் கண்ணில் அப்படியே நிலையாகப் பதிந்திருப்பதுதான்.
அந்த வகையில் நந்தினி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் எனத் தகவல்கள் உருவானதைத் தொடர்ந்து, கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த ஐஸ்வர்யா ராயிடம் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யா ராய், தனது குருநாதரின் படத்தில் மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.