Home கலை உலகம் இந்திய சினிமா விருதுகள்: 4 விருதுகளைப் பெற்ற ‘பொன்னியின் செல்வன்-1’

இந்திய சினிமா விருதுகள்: 4 விருதுகளைப் பெற்ற ‘பொன்னியின் செல்வன்-1’

284
0
SHARE
Ad

புதுடில்லி- ஆண்டுதோறும் இந்திய அரசாங்கம் இந்திய சினிமாவில் சிறந்த திரைப்படங்களையும் கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான 70-ஆவது இந்திய சினிமா திரைப்பட விருதுகள் நேற்று வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 16ஆம் தேதி புதுடில்லியில் அறிவிக்கப்பட்டன.

‘பொன்னியின் செல்வன்’ முதலாம் பாகம் தமிழ்ப் படம் நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது. அறிவிக்கப்பட்ட விருதுகளில் அதிகமான விருதுகளை வென்ற படமாக பொன்னியின் செல்வன் திகழ்கிறது. அது மட்டும் இன்றி தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் 2 விருதுகளை பெற்றிருக்கிறது.

இந்தியாவிலேயே சிறந்த படமாக மலையாளத்தில் வெளிவந்த ‘ஆட்டம்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தில் நடித்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

சிறந்த நடிகைகளாக நித்யா மேனன் – மானசி பரேக் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருச்சிற்றம்பலம் தமிழ்ப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நித்யா மேனன் சிறந்த நடிகை விருதைப் பெறுகிறார். மானசி பரேக், குச் எக்ஸ்பிரஸ் என்ற படத்திற்காக சிறந்த நடிகை விருதை நித்யா மேனனுடன் பகிர்ந்து கொள்கிறார்.

முழுமையான  சிறந்த பொழுதுபோக்கு படமாக காந்தாரா கன்னடப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

மொழிவாரியாக ‘கார்த்திகேயன்-2’ தெலுங்கில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது

தமிழில் சிறந்த படமாக பொன்னியின் செல்வன்-1 தேர்வாகி இருக்கிறது. அனைத்து தரப்பினார்களின் பாராட்டுகளையும் பெற்ற கேஜிஎப்-2 சிறந்த கன்னடப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதே சிறந்த சண்டைக் காட்சிகளுக்காகவும் விருது பெறுகிறது. இரட்டையர்கள் அன்பறிவு இந்த விருதைப் பெறுகின்றனர்.

திருச்சிற்றம்பலம் தமிழ் படம் சிறந்த நடன காட்சிகளுக்கான விருதையும் பெற்றுள்ளது சிறந்த பின்னணி இசைக்காக ஏ ஆர் ரகுமான் பொன்னியின் செல்வன் படத்திற்காக விருதைப் பெறுகிறார்.

சிறந்த ஒலி வடிவத்திற்கான விருதையும், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும்  பொன்னியின் செல்வன் பெற்றிருக்கிறது. ஆக மொத்தம் 4 விருதுகளை இந்தப் படம் வாகை சூடியிருக்கிறது.