சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. தமிழ் நாட்டிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அதே வேளையில் பல விவாதங்களையும் பொன்னியின் செல்வன் ஏற்படுத்தியிருக்கிறது. இராஜ இராஜ சோழன் இந்து மன்னன் எனக் காட்ட முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அவன் இந்து மன்னன் இல்லை என்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஒரு கூட்டத்தில் கூறியதாக தகவல்கள் வெளியிடப்பட்டன.
அதைத் தொடர்ந்து அதை ஆமோதிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், சீமானும் பேசியுள்ளனர்.
திமுக சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட டிகேஎஸ் இளங்கோவன் இராஜ இராஜ சோழன் இந்து அல்ல என்றும் அந்த காலகட்டத்தில் சைவர்கள் – வைஷ்ணவர்கள் என இருபிரிவினர்தான் இருந்தார்கள் என்றும் தெரிவித்தார்.
இதனை ஒத்த கருத்தை நடிகர் கமல்ஹாசனும் தெரிவித்திருக்கிறார். இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 6) பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அவர் கார்த்திக், விக்ரம் ஆகியோருடன் இணைந்து திரையரங்கில் பார்த்தார்.