புத்ரா ஜெயா : 15-வது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற பரபரப்பான ஆரூடங்கள் இன்றுடன் பிசுபிசுத்துப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாமன்னர் இதற்கான ஒப்புதலை அளிக்கவில்லை என்றும் வெள்ளம் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகள்தான் அவரின் தயக்கத்திற்குக் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே வேளையில் நாடாளுமன்றம் கலைப்பு என்பது பொதுவாக அமைச்சரவையின் கூட்டு முடிவாகும். ஆனால் அமைச்சரவையின் 12 அமைச்சர்கள் ஒருங்கிணைந்து பொதுத் தேர்தலை இப்போது நடத்த வேண்டாம் என மாமன்னருக்கு நேரடியாகக் கடிதம் எழுதியிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர்களாவர். இந்தத் தகவலை கல்வி அமைச்சர் ரட்சி ஜிடின் தெரிவித்தார்.
இவ்வாறு அமைச்சரவையில் ஏற்பட்ட பிளவு பகிரங்கமாகியுள்ளதால் மாமன்னரும் நாடாளுமன்றக் கலைப்புக்கு ஒப்புதல் வழங்கும் முடிவை ஒத்தி வைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.