Home நாடு 2023 வரவு செலவுத் திட்டம் : 372.30 பில்லியன் ரிங்கிட் மதிப்பு – முக்கிய அம்சங்கள்...

2023 வரவு செலவுத் திட்டம் : 372.30 பில்லியன் ரிங்கிட் மதிப்பு – முக்கிய அம்சங்கள் என்ன?

440
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அசிஸ் 2023-க்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை இந்தத் திட்டம் 40.2 பில்லியன் ரிங்கிட் கூடுதலான ஒதுக்கீட்டைக் கொண்டதாகும்.

372.30 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டைக் கொண்ட 2023-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 15-வது பொதுத் தேர்தலை மனதில் வைத்து மக்கள் நலன் பயக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது.

‘மலேசியக் குடும்பம், ஒன்றாக இணைந்து வளம் பெறுவோம்’ என்ற தாரக மந்திரத்துடன் சமர்ப்பிக்கப்பட்டது இன்றைய வரவு செலவுத் திட்டம். அதன் முக்கிய அம்சங்களில் சிவற்றைப் பார்ப்போம்.

  • பிரதமர் என்ற முறையில் இஸ்மாயில் சாப்ரி சமர்ப்பிக்கும் 2-வது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் சமர்ப்பிக்கும் 2-வது வரவு செலவுத் திட்டம்
  • பந்துவான் கெலுவார்கா மலேசியா என்னும் பிகேஎம் திட்டத்தின் மூலம் 8.7 மில்லியன் மக்கள் பயனடைவார்கள். இவர்களுக்கு 7.8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
  • 2,500 ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள், 5 அல்லது அதற்கும் கூடுதலான குழந்தைகள் இருந்தால் பிகேஎம் திட்டத்தின் கீழ் 2,500 ரிங்கிட் வழங்கப்படும்
  • இவால்லெட் (Ewallet) என்னும் திட்டத்தின் வழி 100 ரிங்கிட்டுக்கான தொகை எம்40 எனப்படும் நடுத்தர வருமானமுடைய (100 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானம்) குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
  • 50 ரிங்கிட் முதல் 1 இலட்சம் ரிங்கிட் வரையில் வருமானம் பெறும் உள்நாட்டிலுள்ள தனிநபர்களுக்கான வருமான வரி விழுக்காடு 2 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைக்கப்படும்.