Home கலை உலகம் தீபாவளியை மக்களோடு கொண்டாடும் மின்னல் பண்பலை

தீபாவளியை மக்களோடு கொண்டாடும் மின்னல் பண்பலை

632
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மின்னல் பண்பலை குடும்பத்தினர், காற்றலையைக் கடந்து உங்களை நேரில் சந்திக்க வருகின்றோம். #கொண்டாடுவோம் எனும் கருப்பொருளோடு, இவ்வாண்டு மின்னலின் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டவிருக்கின்றது.

வரும் அக்டோபர் 9-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, ஜோகூர் பாரு, ஜே.பி சென்ட்ரல்  கட்டடத்தில் உள்ள சுற்றுலா முகப்புக்கு அருகில், மாலை 4.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை, நேயர்களின் அபிமான மின்னல் அறிவிப்பாளர்கள் திரேசா லசாரு, சத்தியா மற்றும் பவீன்  உங்களைச் சந்திக்கவிருக்கின்றார்கள்.

உங்களுக்காக தீபாவளி பரிசுகளும் காத்திருக்கின்றன. அறிவிப்பாளர்களோடு சேர்ந்து கலைஞர்களும் இணைகிறார்கள். பாடகர் லூர்துநாதன் மற்றும் பாடகி சுகன்யாவையும் நீங்கள் சந்திக்கலாம்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 12ஆம் தேதி, புதன்கிழமை, பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் உள்ள கோலாலம்பூர் சென்ட்ரல், ஜி வளாகத்தில், மின்னல் குடும்பத்தினர் நேயர்களைச் சந்திக்கவிருக்கின்றனர்.  காற்றலை வழியாக உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் அறிவிப்பாளர்கள், நேரடியாக உங்களைச் சந்தித்து, தீபாவளி குதூகலத்தைக் பகிர்ந்துக் கொள்ள ஆவலாய் காத்திருக்கின்றனர். மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை  மோகன், நளினி அச்சுதன், கிஷன், அஷ்வினி ராஜசேகரன் , சகுந்தலா நாராயணன் ஆகியோர் உங்களை சந்திக்க தீபாவளி அன்பு பரிசுகளுடன் வருகிறார்கள். இவர்களோடு நாடறிந்த பிரபல பாடகர்கள் சந்தேஷ் மற்றும் சித்தார்த்தனும் இணைகிறார்கள்.

அக்டோபர் 20-ஆம் தேதி, வியாழக்கிழமை, மாலை 5.00 மணி முதல் 7.00 வரை, பிளஸ் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிச் செல்லும்,  சுங்கை பூலோ மேம்பால உணவக வளாகத்தில் ((ஜெஜாந்தாஸ் சுங்கை பூலோ) மின்னலின் அறிவிப்பாளர்கள் தெய்வீகன் தாமரைச்செல்வன், சுகன்யா சதாசிவம், பிரேமா கிருஷ்ணன், குணசுந்தரி நாகராஜா மற்றும் காயத்திரி கண்ணம்மா நேயர்களுடன் தீபாவளி பண்டிகையை வரவேற்கவிருக்கின்றனர்.  பிரபல நகைச்சுவைக் கலைஞர் சத்யாவுடன், இதர உள்ளூர் கலைஞர்களான மகேன் விகடகவி, ஷாஷ்தன், டீஜே கேசி ஆகியோரும் நேயர்களோடு அளவளாவக் காத்திருக்கின்றனர்.

நீங்களும் நாங்களும் இணைந்தே 2022 தீபாவளி குதூகலத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வோம். உங்களை நேரடியாக சந்திக்கக் காத்திருக்கின்றோம். மின்னல் குடும்பத்தினரின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.