Home உலகம் தாய்லாந்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 31 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 31 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

492
0
SHARE
Ad
தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிராயுத்

பேங்காக் : தாய்லாந்தின் வடகிழக்கு நகர் ஒன்றில் உள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 31 பேர் மரணமடைந்தனர்.

மரணமடைந்தவர்களில் குழந்தைகளும் வயதுக்கு வந்த நபர்களும் அடங்குவர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் ஒரு முன்னாள் காவல் அதிகாரி என நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

அவரைத் தேடும் வேட்டை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

அரசாங்கத்தின் அனைத்து அமுலாக்கப் பிரிவுகளும் உடனடி நடவடிக்கை எடுத்து துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமானவனைத் தேடும் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிராயுத் சான் கட்டளையிட்டிருக்கிறார்.