Home நடந்த நிகழ்ச்சிகள் தமிழாசிரியர்கள் கவிதைப் போட்டிகளில் பங்கெடுப்பது அவசியமாகும்- எம் சரவணன்

தமிழாசிரியர்கள் கவிதைப் போட்டிகளில் பங்கெடுப்பது அவசியமாகும்- எம் சரவணன்

982
0
SHARE
Ad

bhatahiyaaarகோலாலம்பூர், மார்ச்.14- பாட்டுக்கொரு புலவர் பாரதி பாடல்களின்  இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவர்.

இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள்  தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி  என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர்.

இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும் பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர்.

#TamilSchoolmychoice

மலேசிய முத்தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் 9.3.2013-ஆம் தேதி 2வது ஆண்டாக மகாகவி பாரதியார் கவிதை போட்டி மலாயாப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

dato-sara“இது போன்ற கவிதை போட்டிகளில் மாணவரகள் பங்கேற்பது சிறந்ததாகும். அவ்வகையில் மாணவர்களுக்கு கற்றுத் தரும் ஆசிரியர்களும் இது போன்ற நிகழ்வுகளில் பங்கெடுப்பது அவசியமாகும். அவ்வாறு பங்கு கொள்ளும் ஆசிரியர்கள் தங்களின் கவிதை திறனை வளர்த்துக் கொள்வதோடு சிறப்பாக கவிதை புனைய கற்றுத்தர இயலும்” என்று கூட்டரசு பிரதேச நல்வாழ்வு துணையமைச்சர் டத்தோ.எம் சரவணன் கூறினார்.

பாரதியாரின் சிறப்பை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எடுத்து கூறவே இந்நிகழ்வு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. இக்கவிதை போட்டியில் ஏறக்குறைய நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் முனைவர் கிருஷ்ணன் மணியம், விரிவுரையாளர் மன்னர் மன்னன் மலாயாப் பல்கலைகழகத்தின் இந்து சங்கத் தலைவர் பிரசாந்த் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.