Home அரசியல் 3ஆவது நாளாக உண்ணாவிரதம் நீடிப்பு- வேதமூர்த்தி

3ஆவது நாளாக உண்ணாவிரதம் நீடிப்பு- வேதமூர்த்தி

674
0
SHARE
Ad

waythaரவாங், மார்ச்.14-ஜாலான் டெம்ப்ளர் 17, ½ மைலில் உள்ள கம்போங் பெங்காலியில் அருள்மிகு அகோர வீர பத்ர-சங்கிலிக் கருப்பர் ஆலயத்தில் வெறும் தண்ணீரை மட்டுமே அருந்திய நிலையில் வேதமூர்த்தி தமது போராட்டத்தை தொடர்ந்து வருவதாக ஹிண்ட்ராஃப் துணைத்தலைவர் ஐம்புலிங்கம் தெரிவித்தார்.

மலேசிய இந்தியர்களின் 56 ஆண்டு கால மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பி.வேதமூர்த்தி மேற்கொண்டிருக்கின்ற உண்ணாவிருதம் போராட்டம்  மூன்றாவது நாளாக நீடித்தது.

உண்ணாவிருதம் தொடர்பாக, சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன. மாலை நேரங்களில் அதிகமானோர் ஆலயத்திற்கு வந்து அவருக்கு உற்சாகம் மூட்டுவதோடுமருத்துவர்கள் சிலர் சுயமாகவே வந்து அவருக்கு அலோசனை வழங்குகின்றனர்.

#TamilSchoolmychoice

“உண்ணாமல் என் போராட்டத்தை நான் தொடர முடியும். இப்போதைய உண்மையான சக்தி தேசிய முன்னணியிடமோ மக்கள் கூட்டணியிடமோ இல்லை. மாறாக மக்களிடம் தான் இருக்கிறது.

மக்கள் கூட்டணி தனது கட்சியில் உள்ள இந்திய தலைவர்களை சாமார்த்தியமாகப் பயன்படுத்தி இந்தியர்களை பிளவுபடுத்த பார்க்கிறார்கள்.

ஹிண்ட்ராஃப் குறிப்பிட்ட சில நிபந்தனைகளை தேசிய முன்னணி ஏற்க மறுத்துவிட்டது. மேலும், இந்தியர்கள் தொடர்பான விவாதங்களுக்கும் அவர்கள் பதில் சொல்லவில்லை” என்று உண்ணாவிருதத்தை மேற்கொள்ளும் போது செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.