இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர்.
இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும் பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர்.
மலேசிய முத்தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் 9.3.2013-ஆம் தேதி 2வது ஆண்டாக மகாகவி பாரதியார் கவிதை போட்டி மலாயாப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாரதியாரின் சிறப்பை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எடுத்து கூறவே இந்நிகழ்வு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. இக்கவிதை போட்டியில் ஏறக்குறைய நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் முனைவர் கிருஷ்ணன் மணியம், விரிவுரையாளர் மன்னர் மன்னன் மலாயாப் பல்கலைகழகத்தின் இந்து சங்கத் தலைவர் பிரசாந்த் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.