Home இந்தியா விவசாயிகளுக்காக விருதுநகரில் வைகோ உண்ணாவிரதம்

விவசாயிகளுக்காக விருதுநகரில் வைகோ உண்ணாவிரதம்

638
0
SHARE
Ad

vaikoவிருதுநகர்,மார்ச்.14-  விவசாயிகளுக்காக விருதுநகரில் வைகோ ஒருநாள் உண்ணாவிரதத்தைத் துவங்கியுள்ளார்.

விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் கட்சியினர் 300 பேருடன் வைகோ உண்ணாவிரதத்தைத் துவங்கியுள்ளார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்கவும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று காலை விருதுநகர் தேசபந்து மைதானத்திற்கு வந்த வைகோ அங்கு உண்ணாவிரதம் அமர்ந்தார். அவருடன் 300க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களும் அமர்ந்துள்ளனர்.

அப்போது வைகோ கூறுகையில், தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 நஷ்ட ஈடு தர வேண்டும்.

அதேபோல விவசாயம் பாதித்து அதனால் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.