கோலாலம்பூர் – மலேசியாவிற்கு வருகை புரிந்திருக்கும் நடிகரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எஸ்.வி.சேகர் நேற்று கோலாலம்பூரிலுள்ள தங்கும்விடுதி ஒன்றில் இங்குள்ள செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது சினிமாவுடன், தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில், ரஜினியை பாஜக-வில் இணைக்க தற்போது முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறப்படுவது பற்றி செல்லியல் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், “எனக்குத் தெரிஞ்சு ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். ஏன்னா ரஜினியின் வாழ்க்கை முறை வேற. அவருடைய ஆன்மீகத் தேடலும், அரசியலும் வேறு. இது என்னுடைய கருத்து. அவர் எல்லாருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைக்கலாம். கலைஞருக்கு நெருக்கமானவர், ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர், மோடிக்கும் நெருக்கமானவர். அவர் தனியாக ஒன்னு ஆரம்பித்தால் எல்லோருக்கும் எதிரியாகக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. ரஜினி என்ன நினைக்கிறார் என்று சொல்லமுடியாது. ரஜினி என்ன செய்வார் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அதை அவர் செய்வாரா என்று எனக்குத் தெரியாது.” என்று தெரிவித்தார்.
எஸ்.வி.சேகருடனான முழு நேர்காணலையும் படிக்க கீழ்காணும் இணைப்பைப் பயன்படுத்தவும்:-