Home Featured கலையுலகம் சென்னையை மூழ்கடித்த ‘செம்பரம்பாக்கம்’ – வசந்த பாலனின் புதிய படம்!

சென்னையை மூழ்கடித்த ‘செம்பரம்பாக்கம்’ – வசந்த பாலனின் புதிய படம்!

713
0
SHARE
Ad

vasantha-balanசென்னை – கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் கொட்டித் தீர்த்த வடகிழக்குப் பருவமழையை யாரும் மறந்திருக்க முடியாது. அச்சமயம் சென்னை அருகேயுள்ள செம்பரம்பாக்கம் ஏரி முழுமையாக நிரம்பியது. நள்ளிரவு நேரத்தில் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஒட்டுமொத்த சென்னை மாநகரமே மழை, வெள்ளத்தில் கிட்டத்தட்ட மூழ்கிப் போனது.

இலட்சக்கணக்கானோரை பாதித்த அந்த நிகழ்வை திரைப்படமாக்க உள்ளார் பிரபல இயக்குநர் வசந்தபாலன் (படம்). இந்தப் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இந்தப் படத்திற்கு ‘செம்பரம்பாக்கம்’ என்றே தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். அடையாறு கரையில் வசிக்கும் மக்களின் வெள்ளப் பாதிப்புகளைப் பற்றி இப்படம் பேச இருக்கிறதாம்.

#TamilSchoolmychoice

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன், எப்போதுமே வித்தியாசமான கதைக்களத்தை தேடக்கூடியவர். மேலும் யதார்த்தமான காட்சி அமைப்பு, திரைக்கதை, வசனம் என தன் படைப்புகளுக்காக அதிகம் பாடுபடக் கூடியவர்.

‘செம்பரம்பாக்கம்’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் துவக்கத்தில் வெளியாக உள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கக்கூடும். அதற்குள் படத்தின் நாயகி, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளனர்.