Home One Line P2 காத்தோடு காத்தானேன்: ‘ஜெயில்’ படப் பாடல் வெளியானது

காத்தோடு காத்தானேன்: ‘ஜெயில்’ படப் பாடல் வெளியானது

880
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் வசந்த பாலன் இயக்கிய ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். தற்போது அவர் இயக்கி உள்ள ‘ஜெயில்’ படத்தில் இசையமைத்து நடித்தும் உள்ளார்.

இத்திரைப்படம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் படமாகும். இப்படத்தில், ஜி.வி. பிரகாஷுக்கு இணையாக ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ தொலைக்காட்சி நிகழ்ச்சி புகழ் அபர்நதி நடிக்கிறார்.

மேலும் ராதிகா சரத்குமார் ஒரு முக்கிய துணை வேடத்தில் நடிக்கிறார்.

#TamilSchoolmychoice

இப்படத்திலிருந்து முதல் பாடல் அண்மையில் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். ‘காத்தோடு காத்தானேன்’ எனும் இப்பாடலை கபிலன் எழுதியிருக்க, நடிகர்கள் தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி பாடியுள்ளனர்.

அண்மையில் வெளியிடப்பட்ட இப்பாடல் தற்போது 1 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

கீழ்காணும் இணைப்பில் இப்பாடல் காணொளியைக் காணலாம்: