Home Featured நாடு நஜிப்புக்கு எதிரான கூட்டம்: அழைத்தால் பங்கேற்க மகாதீர் தயார்

நஜிப்புக்கு எதிரான கூட்டம்: அழைத்தால் பங்கேற்க மகாதீர் தயார்

554
0
SHARE
Ad

கோலாலம்பூர்-பிரதமர் நஜிப் பதவி விலக வலியுறுத்தி மார்ச் 27ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், தாம் பங்கேற்கத் தயாராக உள்ளதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு அக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டால் நிச்சயம் செல்லப்போவதாகக் கூறினார்.

Dr-Mahathir-Mohamedமார்ச் 27ஆம் தேதி மூடிய அரங்கில் நடைபெற உள்ள இக்கூட்டத்திற்கு டத்தோ சைட் இப்ராகிம் ஏற்பாடுகள் செய்து வருகிறார். இக்கூட்டத்தில் பல தலைவர்கள் பங்கேற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்படியொரு கூட்டத்தை நடத்துவது குறித்து ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“எத்தகைய கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படும், எவற்றுக்கெல்லாம் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பது வழக்கறிஞரான சைட் இப்ராகிமிற்கு தெரிந்திருக்க வேண்டும்” என்று அபுபாக்கர் கூறியுள்ளார்.

இதற்கிடையே காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ள மகாதீர், அவர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் அளிக்க தாம் மறுத்துவிட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

“எத்தகைய கேள்வியாக இருந்தாலும் நீதிமன்றத்தில் தான் விளக்கம் அளிப்பேன். என் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. எனினும் நான் அதற்கு தயாராகவே உள்ளேன்.

“மார்ச் 27ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்திற்கு செல்ல நான் தயார். அதற்கான அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில்… ஆம்… அந்தக் கூட்டத்தில் நான் பங்கேற்பேன்” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.