கோலாலம்பூர் – மலேசியாவிற்கு வருகை புரிந்திருக்கும் நடிகரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எஸ்.வி.சேகர் நேற்று கோலாலம்பூரிலுள்ள தங்கும்விடுதி ஒன்றில் இங்குள்ள செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது சினிமாவுடன், தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில், விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் பதவியை இழந்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், “வேண்டாம் என்று தூக்கி வீசிய சட்டையை யாரு எடுத்துக் கொண்டு போனா தான் என்ன சார். அவரே சிவப்பு லைட்டு வச்ச கார்ல போறதே இல்லயே. ஆனால் அவருக்கு இந்தத் தேர்தலில் ஒரு முக்கியத்துவம் உள்ளது. அதனால தான் அவர் ஒரு தவிர்க்க முடியாது சக்தியா இருக்காரு. கோயம்பேடுக்கு கறிகாய் வாங்கப் போனாங்க. இப்ப விஜயகாந்த பார்க்கப் போறாங்க. அவரைப் பார்த்துட்டு வர்ற வழியில வேணா கறிகாய் வாங்கிட்டு வர்றாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் விஜயகாந்த் ஒரு நேர்மையான அரசியல்வாதி. நல்ல ஆட்சி வரணும்னு விரும்புறாங்க. அவரை சோஷியல் மீடியாவுல கேலி பேசுறது எல்லாம் நாகரீகமான ஒரு செயலே அல்ல. அவர் தண்ணியடிக்கிறத திடீர்னு நிறுத்தும் போது அதற்கு உண்டான சில பக்க விளைவுகள் வரும். ஒருவரின் உடல் உபாதைகளையும், உடல் கோளாறுகளையும் கேலி செய்பவர்கள் தான் மட்டமானவர்கள். அதனால விஜயகாந்தை கேலி செய்வது ஒரு தவறுதலான விசயம். அந்தக் கேலியை செய்பவர்கள் தில்லு இருந்தா அவர் முன் நேரடியாக கேலி செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்.” என்று தெரிவித்தார்.
எஸ்.வி.சேகருடனான முழு நேர்காணலையும் படிக்க கீழ்காணும் இணைப்பைப் பயன்படுத்தவும்:-